August 17, 2021

சொட்டு நீர்ப் பாசனம்

நுண்ணீர்ப் பாசனம் அல்லது  சொட்டு நீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய்கள் அமைத்து அதன் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பில் அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாக வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். என்னதான் நீராதாரம் குறைந்தாலும், விவசாயம் செய்யும் நிலப்பரப்பு குறைந்தாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க விளைச்சல் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீரை வீணாக்காமல் கிடைக்கும் நீரைக் கொண்டு வேளாண்மையில் நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் உழவர்கள் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே "நுண்ணீர்ப் பாசனத் திட்டமாகும் அல்லது சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்" எனப்படுவது.

இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான விவசாயிகள் பயணடைந்துள்ளனர். தங்களிடம் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை முதன்மை குழாய், துணைக் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை அளிக்க உதவுகிறது. இதில் விடும் தண்ணீரானது மெதுவாகவும் குறைந்த அழுத்தத்திலும் செடியின் வேர்ப் பகுதியில் நேரடியாக அளிக்கப்படுகிறது. பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும். இதன் மூலம் விளைச்சலில் எந்தவிதமான பாதிப்புமின்றி உற்பத்தி அதிகரிக்கிறது.

சொட்டு நீர்ப் பாசனத்திற்கு உபயோகிக்கும் கருவிகள்:

* மேல் நிலைத் தொட்டி - தண்ணீர் தேக்கி வைக்க முக்கிய பகுதியில் இருக்க வேண்டும்.

* குழாய்கள் - 50, 75 மி.மீ. அளவில் இருக்க வேண்டும்.

* சொட்டு குழாய்கள் - 2, 4, 8 எல்.பி.ஹெச். போன்ற அழுத்தமுடைய குழாய்களாக இருக்கு வேண்டும்.

* தண்ணீர் வடிக்கும் சல்லடை - பெரிய மண் துகள்களை மற்றும் நுண்ணிய துகள்களை வடிக்க பயன்படுத்தப்படுகிறது.

* உரத்தொட்டி - கரைத்த உரங்கள் மற்றும் நீர்ம உரங்களை தேக்கி வைத்து குழாய்கள் மூலம் பயிர்களுக்கு அனுப்ப பயன்படுகின்றது.

* பின்நோக்கிய நீரோட்டத்தை கட்டுப்படுத்தும் கருவி - குழாய்களில் செலுத்தப்பட்ட நீர் பின்னோக்கி செல்லுவதைத் தடுத்து நிறுத்த பயன்படும்.

* அழுத்த மானி - செலுத்தப்படும் தண்ணீரின் அழுத்தத்தை மாற்றிக்கொள்ள உபயோகப்படுகிறது.

சொட்டு நீர்ப் பாசனத்தை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்:

1. வெளிப்புறமாக குழாய்களைப் பதித்து பாசனம் செய்வது.

2. நிலத்துக்குக் கீழ் உட்புறமாக குழாய்களைப் பதித்து பாசனம் செய்வது.

இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட முறை 'கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனம்' (Sub surface Drip Irrigation, SDI) எனப்படும். இம்முறை மூலம், களை எடுக்கும் போதும், அறுவடை செய்யும் போதும் குழாய்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.

தண்ணீரை தேக்கி வைக்க சிரமம்:

தண்ணீரை தேக்கி வைக்க முடியாத இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் அதிக அளவில் உபயோகப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சொட்டு நீர்ப் பாசனம் பேருதவியாக அமையும். மேலும் மலைச்சார்ந்த பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடுவது அதிகமாக இருப்பதனால், அதிக அளவிலான தண்ணீர் வீணாகிறது. அப்படியான இடங்களில் சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் நீர் குறைவாகவும், கூடிய ஆற்றலுடனும் பயன்படுத்தப்படுவதனால் நீர் வீணாவது குறைக்கப்படும்.

தண்ணீரின் தன்மை:

பயிருக்குச் செலுத்தப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளபோது, சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் செலுத்தினால், தண்ணீரில் உப்பு தேங்கி பயிரை தாக்குவது குறைக்கப்படும்.

இருப்பினும் இதில் சில சிக்கல்கள் உள்ளன, அவை என்னவென்றால் :

~ ஆரம்பச்செலவு மிகவும் அதிகம்.

~ வெளியே சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் பட்சத்தில் முறையாக பாசனம் செய்வதில் சிரமம் ஏற்படும்.  

~ நமக்கு தேவைப்படும் நேரத்தில் நீர்ப் பாய்ச்ச ஆட்கள் கிடைப்பதில்லை.

~ குழாய்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.

~ குறைந்த அளவே தண்ணீர் இருக்கும் பட்சத்தில் சமமாக தண்ணீர் அளிப்பதில் சிரமம்

~  அணில்,எலி போன்ற விலங்குகள் பாசனம் செய்யும் குழாய்களை கடித்து சேதப்படுத்துவதால் மிகுந்த விரயம்.

~ தண்ணீரில் உப்பு அளவு அதிகமாக இருக்கும் பொழுது  குழாய்களில் அடைப்பு ஏற்படும்.

 மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதில் சில சிரமங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்து தான் வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் "நயாகரா சொல்லியுசன்ஸ்(Niagara Solutions)" எனும் நிறுவனம்" விவசாயிகள் பயனடையும் வகையில் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ஏற்றவாறு வித விதமான இயந்திர கருவிகளை வடிவமைத்துள்ளனர். அங்கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் எவ்வித சிரமமும் இன்றி உற்பத்தி செய்ய முடியும்.

"நயாகரா" நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளை வழங்கி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்தை அணுகுவதற்கு "https://www.niagarasolutions.in" என்ற இணயதளத்தை பயன்படுத்தலாம் அல்லது அந்நிறுவனத்தின் தொலைபேசி எண் "9842505100" இதன் மூலமாகவும் அணுகலாம்.

இவர்களின் கண்டுபிடிப்பு கருவி எவ்வாறு நீர் பாசனம் செய்ய பயன்படுகின்றது என்பதை பார்ப்போம் :

~ இவர்கள் கண்டுபிடிப்புகள் இக்காலத்திற்கு ஏற்றவாறு நவீன தொழில் நுற்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

~ நயாகரா நிறுவனம் அக்கருவிகளுக்கென்றே  உருவாக்கியுள்ள செயலி மூலம் நாம் அதனை இருக்கும் இடத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம்.

~ இதன் மூலம் அனைத்து மரத்திற்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைக்க உதவுகிறது.

~ இதற்கென்று தனியாக வேலைக்கு ஆட்கள் தேவையில்லை.

~ நாம் விரும்பும் நேரத்தில் பாசனம் செய்யலாம்

~ குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தப்படும்.

~ மொபைல் செயலி மூலம் ஒரு இடத்திற்கு செல்லும் தண்ணீரை மற்ற இடத்திற்கு மாற்றலாம்.

~ இந்த செயலி மூலம் எந்த இடத்தில் பாசனம் செய்ய வேண்டும், எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது, நீரோட்டத்தின் அழுத்தம் என்ன, எப்பொழுதும் மோட்டாரை அனைக்க வேண்டும் என அனைத்தையும் நமக்கு ஏற்றவாறு அமைத்து கொள்ளலாம்.

~ குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். 


Warning: Undefined array key "preview" in /home/u877737861/domains/niagarairrigationautomation.com/public_html/tamil/wp-content/plugins/oxygen/component-framework/components/classes/comment-form.class.php on line 75

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key "preview" in /home/u877737861/domains/niagarairrigationautomation.com/public_html/tamil/wp-content/plugins/oxygen/component-framework/components/classes/comment-form.class.php on line 79
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram